Blogger இயக்குவது.

ஈரோட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 14 ஜூலை, 2014

ஈரோடு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் 13.07.2014 அன்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அ.ஷாஜகான் என்ற அப்துல் சுக்கூர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல் கனி, துணை செயலாளர் பி.முருகானந்தன், துணை தலைவர் எம்.ஆர்.அர்சத், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் கே.முஸ்தபா என்கிற நவாப்ஜான் வரவேற்பு உரை ஆற்றினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வை.காவேரி, தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், துணை பொதுச்செயலாளர் ஆர்.பி.தமிழ்நேசன், நிர்வாக குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் கோ.வி.சிவராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துணை தலைவர் சி.மணிகண்டன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் கழிவுநீர் பிரச்சினையால் மூடப்படுவதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சாய மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதை தடுக்க ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

2. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களை சேர்த்து கட்சி கொடியேற்ற வேண்டும்.

3. ஈரோடு மாநகராட்சியில் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் முக்கியமான இடங்களில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்வது.

உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP