கரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்
ஞாயிறு, 13 ஜூலை, 2014
கரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் கரூரில் 12.07.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் என். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். க. பரமத்தி ஒன்றியச் செயலர் ப.சு. இளமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலர் மருத்துவர் வை. காவேரி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தி. திருமால்வளவன், மாநில துணைப் பொதுச் செயலர் ஆர்.பி. தமிழ்நேசன் உள்ளிட்டோர் பேசினர்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2. மாவட்டத்தில் அதிகமாக நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் செல்லும் லாரிகளில் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. பிச்சம்பட்டி மாணவி வினிதா கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக