Blogger இயக்குவது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முற்றுகையிட்டு போராட்டம்

திங்கள், 21 ஜூலை, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 21.07.2014 திங்கள் காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி உள்ளிட்ட காவிரிப் டெல்ட்டா பாசனப்பகுதியின் பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்களை ஒன்றிணைத்த காவிரி உரிமை மீட்புக் குழுவினரால் வடக்குவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர், தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் முற்றுகையிடப்பட்டது.

"காவிரி இல்லாமல் வாழ்வில்லை களம் காணாமல் காவிரி இல்லை” காவிரி தமிழர் செவிலித்தாய் காவிரி தமிழர் உரிமை சொத்து “ காவிரி தமிழர் இரத்த ஓட்டம்” அனுமதியோம் அனுமதியோம்! காவிரி தாய்க்கு விலங்கிட்டு சிறைவைக்கும் கன்னடனுக்கு துணைப் போகும் இந்திய அரசுக்கு இங்கே என்ன வேலை? அனுமதியோம் அனுமதியோம், இந்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கு தமிழர் நாங்கள் அனுமதியோம்” என்று முழக்கங்கள் எதிரொலிக்க 200க்கும் மேற்பட்ட தோழர்கள் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில்
திரு. ரமேஷ், திரு கோ.வி.தில்லைநாயகம் (நகரச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), எ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர். மதி.மு.க) என்.இராமலிங்கம் (வடக்கு மாவட்டச் செயலாளர். மதி.மு.க) திரு க.முருகன் (தலைமைச் செயற்குழு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), எம்.முகமது அஸ்ஸாம் (மாவட்டச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி), திரு. தங்க.கென்னடி ( குமராட்சி ஒன்றியச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி) திரு என்.ஜெயபாலன் (கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி) திரு.ப.விநாயக மூர்த்தி (தலைவர், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம்), திரு கீ.செ. பழமலை ( தமிழர் தேசிய முன்னணி). திரு கு.சிவப்பிரகாசம் (நகரச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), திரு விடுதலைச் செல்வன் (மாவட்டச் செயலாளர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), திரு விநாயகம் (செயலாளர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம்), திரு.வே.சுப்பிரமணிய சிவா (அமைப்பாளர், தமிழக மாணவர் முன்னணி), திரு.ஆ.குபேரன் ( தமிழக துணைப் பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி) உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும் , உணர்வாளர்களும் இதில் கைதாயினர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP