கும்பகோணம் நேரு- அண்ணா காய்கறி சந்தையில் மேற்கூரை அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு, 13 ஜூலை, 2014
தஞ்சை வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டம் தாராசுரத்தில் நடந்தது.
வடக்கு மாவட்ட அமைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியம், மணிகண்டன், பாலு, இந்திராணி, பாஸ்கரன், முருகன், ராமச்சந்திரன், குடிதாங்கி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணன் வரவேற்றார். தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் தி.திருமால்வளவன் சிறப்புரையாற்றினார். தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தமிழ்நேசன், ஜோதிலிங்கம், மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் சிவராமன், பேரவை மாநில தலைவர் ஜம்புலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பது.
2. திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து தஞ்சை வடக்கு மாவட்டமாக பிரித்து அதன் மாவட்ட செயலாளராக செல்வத்தை நியமனம் செய்வது.
3. கும்பகோணம் நகராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் கும்பகோணம் நேரு- அண்ணா காய்கறி சந்தையில் 400க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்படும் நிலையை போக்க மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகனை மேற்கூரை அமைத்து தருமாறு கேட்டு கொள்வது.
4. நகராட்சி சார்பில் தாராசுரம் காய்கறி சந்தையின் அருகே பொதுமக்களுக்கு ஏ.சி. பேருந்து நிறுத்தம் அமைத்துத்தர வேண்டும்.
5.அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாய நன்கொடை வாங்கி நடத்தப்படும் வகுப்புகள் அரசின் அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா என்பதை மேல்நிலைப்பள்ளிகளின் இயக்குனர் தெளிவுப்படுத்த வேண்டும்.

என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக