Blogger இயக்குவது.

நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ரமலான் பெருநாள் வாழ்த்துச்செய்தி

செவ்வாய், 29 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள ரமலான் பெருநாள் வாழ்த்துச் செய்தி:

ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பெருநாளை கொண்டாடுகிற இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய உறவுகளின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணத்துக்குடன் வாழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் போதனை. இதை நாம் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

ரமலான் பெருநாளில் ஈழத்தில், பாலஸ்தீனத்தில் என இஸ்லாமிய உறவுகள் வேட்டையாடப்படுகிற பெருந்துயரம் முடிவுக்கு வரவும் பிரார்த்திப்போம். மனித நேயம் மலரவும் ஒடுக்கப்படுகிற மக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுக்கவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரைப்போம். அண்ணல் நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

இந்நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீரை வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்க தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 28 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஆத்தூர் டி.ஜி.ஆர்.திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, தலைமை செயலாளர் உ.கண்ணன், மாநில தமிழர் படைஜோதிலிங்கம் ஆகியோர், கட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து பேசினர். ஆத்தூர் நகர செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் வாழப்பாடி பச்சமுத்து, பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. மேட்டூர் அணையில் திறந்து விடும் உபரி நீர், வீணாக கடலில் கலப்பதால், உபரி நீரை, வசிஷ்ட நதியில் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்தால், சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட விளை நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.

2. கரியக்கோவில் அணையில், கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுவதால், கைக்கான் வலவு நீரோடையை, கரியக்கோவில் அணைக்கு செல்லும் வகையில், புதிய நீரோடை அமைத்தால், அதிகளவில் தண்ணீர் தேக்க முடியும்

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் (தெற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

சனி, 26 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் (தெற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 25.07.2014 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் கெங்கணாபுரம் ஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.





Read more...

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வெள்ளி, 25 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
  "பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை. இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடல் ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது தொடர்பாக சுப்பிரமணியசாமியிடம் இந்திய ஜனாதிபதி பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? இலங்கை சென்ற சுப்பிரமணியசாமி குழு பற்றி மோடி அரசின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக பா.ஜனதா கட்சி ஆகியவை கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இது பச்சை தமிழின துரோகம் அல்லவா?’’


Read more...

தமிழக அரசு சார்பில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வியாழன், 24 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீலகிரி மாவட்ட செயற்குழுக் கூட்டம், கோத்தகிரியில் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர் பி.அழகு தலைமை வகித்தார். தென் மண்டலப் பொறுப்பாளர் ஆர்.பி.தமிழ்நேசன், மாநில தமிழர் படைத் தலைவர் கி.ஜோதிலிங்கம், மாநில தொழிற் சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் சுதாகர் வரவேற்றார். கட்சியின் தலைமை நிலையச் செயலர் உ.கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றிய அமைப்பாளர்கள் பாபு, பஷீர், ராமச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் சேகர், செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:
1. நீலகிரி மாவட்டத்தில் ஏழை மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இலவச மரக்கன்றுகளை தரமானதாக வழங்க வேண்டும்.

2. நெடுகுளா கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும், அப்பகுதியில் வன விலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதால் தெரு விளக்குகள் அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழக அரசு சார்பில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி (மேற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி (மேற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 23.07.2014 (புதன்கிழமை) காலை 10.00 மணி அளவில் ஓசூர் தாசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.




Read more...

வந்தவாசி-சென்னை வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்க திருவண்ணாமலை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதன், 23 ஜூலை, 2014


Read more...

அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

செவ்வாய், 22 ஜூலை, 2014

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பில் 21.07.2014 (திங்கட்கிழமை) அன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.



 

Read more...

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முற்றுகையிட்டு போராட்டம்

திங்கள், 21 ஜூலை, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 21.07.2014 திங்கள் காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி உள்ளிட்ட காவிரிப் டெல்ட்டா பாசனப்பகுதியின் பல்வேறு உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்களை ஒன்றிணைத்த காவிரி உரிமை மீட்புக் குழுவினரால் வடக்குவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர், தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் முற்றுகையிடப்பட்டது.

"காவிரி இல்லாமல் வாழ்வில்லை களம் காணாமல் காவிரி இல்லை” காவிரி தமிழர் செவிலித்தாய் காவிரி தமிழர் உரிமை சொத்து “ காவிரி தமிழர் இரத்த ஓட்டம்” அனுமதியோம் அனுமதியோம்! காவிரி தாய்க்கு விலங்கிட்டு சிறைவைக்கும் கன்னடனுக்கு துணைப் போகும் இந்திய அரசுக்கு இங்கே என்ன வேலை? அனுமதியோம் அனுமதியோம், இந்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கு தமிழர் நாங்கள் அனுமதியோம்” என்று முழக்கங்கள் எதிரொலிக்க 200க்கும் மேற்பட்ட தோழர்கள் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்தில்
திரு. ரமேஷ், திரு கோ.வி.தில்லைநாயகம் (நகரச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), எ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர். மதி.மு.க) என்.இராமலிங்கம் (வடக்கு மாவட்டச் செயலாளர். மதி.மு.க) திரு க.முருகன் (தலைமைச் செயற்குழு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), எம்.முகமது அஸ்ஸாம் (மாவட்டச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி), திரு. தங்க.கென்னடி ( குமராட்சி ஒன்றியச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி) திரு என்.ஜெயபாலன் (கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி) திரு.ப.விநாயக மூர்த்தி (தலைவர், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம்), திரு கீ.செ. பழமலை ( தமிழர் தேசிய முன்னணி). திரு கு.சிவப்பிரகாசம் (நகரச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), திரு விடுதலைச் செல்வன் (மாவட்டச் செயலாளர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), திரு விநாயகம் (செயலாளர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம்), திரு.வே.சுப்பிரமணிய சிவா (அமைப்பாளர், தமிழக மாணவர் முன்னணி), திரு.ஆ.குபேரன் ( தமிழக துணைப் பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி) உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும் , உணர்வாளர்களும் இதில் கைதாயினர்.













Read more...

நஷ்டத்தில் இயங்கும் சக்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் 20.07.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலர் ராம.ரவி.அலெக்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை நிலைய செயலர் கனல் உ.கண்ணன், மாநில தமிழர் படைத் தலைவர் கி.ஜோதிலிங்கம், சுரேஷ் குமார், ராஜேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. சென்னை மெளலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பது.

2. காவிரி நடுவர் தீர்ப்பாணையம், முல்லைப் பெரியாறு அணை உயர்த்துதல் போன்றவற்றில் உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு இக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிப்பது,

3. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குவதையும், மீன்பிடி வலைகளை அறுப்பதையும், சிறைப் பிடிப்பதையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இச செயலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது,

4. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக் வலியுறுத்தப்பட்டது.





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் சிறப்பு நிகழ்ச்சி 19.07.2014 அன்று மாலை திருவல்லிக்கேணி அல் மாலிக் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொருளாலர் அ.அகரம்கான் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், வை.காவேரி, சத்திரியன் வேணுகோபால், காமராஜ், அக்ரம்கான், முகமதுஷபிக், தேவ்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







Read more...

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சன் செய்திகள் தொலைக்காட்சியில் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி - காணொளி

வெள்ளி, 18 ஜூலை, 2014

சன் செய்திகள் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி - 17.07.2014 



Read more...

இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

இந்திய முஸ்லீம் லீக் நடத்திய  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொருளாலர் அக்ரம்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். 







Read more...

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் கையூட்டு வாங்குவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வியாழன், 17 ஜூலை, 2014

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உட்பட அனைத்து பணிகளும் இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெற்று வழங்குவதை கண்டித்தும், கையூட்டு வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தினை முற்றுகையிடும் போராட்டம் இன்று 17.07.2014 (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தின் போது வட்டார போக்குவரத்து அலுவக ஆணையர் அவர்களிடம் நூறு ரூபாய் இணைத்த மனு அளிக்கபட்டது. அப்போது ஆணையர் அவர்கள் கையூட்டு பெற்று பணிகள் நடைபெறுவதை தடுக்க இணையதள வழி கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைபடுத்த நடைவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.











Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP